‘மீ டூ’ இயக்கத்தை இந்தியாவில் நான் தான் பரப்பினேன்

ஹிந்தி நடிகர் நானே படேகர் உள்ளிட்ட பலர் மீது அதிரடியாக பாலியல் புகார் கூறியவர் தனுஸ்ரீ தத்தா. ‘மீ டு’ இயக்கத்தின் மூலம் அவர் அதிரடியாக புகார் கூறினார். இந்நிலையில், ‘மீ டூ’ இயக்கத்தை இந்தியாவில் நான் தான் பரப்பினேன் என கூறுவதை என்னால் ஏற்க முடியாது’ என கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது : நான் ஒரு வழிகாட்டியாகத்தான் ‘மீ டூ’வை பயன்படுத்தி வினையாற்றினேனே தவிர, மொத்த வெளியிடலுக்கும் நான் காரணம் அல்ல. நான் ஆற்றிய வினை மூலம் சமூகத்தில் சில மாற்றங்கள் நல்லபடியாக நடந்துள்ளது. அதை என்னால் அடித்துக் கூற முடியும். அதற்காக, என்னை பழிவாங்கினர். இதனால், திரையுல வாழ்க்கை பல வருடங்களுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கிறது.

தற்போது நான் அமெரிக்காவுக்கு வந்திருக்கிறேன். சில காலம் இங்கு வாழ்ந்து விட்டு, பின் தாயகம் திரும்புவேன். எனது குடும்பத்தினர்தான் எனக்கு பாதுகாப்பு. அதனால், அமெரிக்காவில் அவர்களை மிஸ் பண்ணுகிறேன். தனிப்பட்ட ஒருவரை எந்த விஷயம் சார்ந்திருந்தாலும், அது வெளிச்சத்துக்கு வராது. அதனால், தனிப்பட்ட விஷயமாக நான் எதையும் வைத்திருக்கவில்லை.

இவ்வாறு தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.

Sharing is caring!