மீ டூ சர்ச்சை – பெண் உதவி இயக்குனர்கள் வேண்டாம்

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சூறாவளியாக சுழன்றடித்த மீ டூ சர்ச்சை, தற்போது சற்று அமுங்கி இருப்பது போல தோன்றினாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் சில புகார்கள் வெளியான வண்ணம் தான் இருக்கின்றன. மலையாள சினிமாவில் நிறைய கதாநாயகிகளை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு அனுப்பி வைத்தவர் என்கிற பெருமை கொண்ட இயக்குனரான லால்ஜோஷும், இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக சில முடிவுகளை எடுத்துள்ளார்.

இதுவரை அவரது படங்களில் உதவி இயக்குனராக சில பெண்களும் ஆர்வமுடன் பணிபுரிந்து வந்தனர். ஆனால் இனி அடுத்து இயக்கப்போகும் படங்களில் பெண் உதவி இயக்குனர்களை சேர்ப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

இதுபற்றி சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய லால்ஜோஸ், “இன்று மீ டூ என்கிற பெயரில் பெண்கள் சிலர் புகார் கூறி வருகின்றனர் இதில் சில அப்பாவி ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத ஒன்று. இந்த உலகம் இந்த விஷயத்தில் பெண்கள் சொல்வதை மட்டுமே நம்பும்.. அதனால் தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாக கூடாது என்பதற்காகவும், நமது வேலைகளில் இந்த பிரச்சனையை போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும், எனது அடுத்த படங்களில் பெண் உதவி இயக்குனர்களை சேர்க்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்” என கூறியுள்ளார் இயக்குனர் லால்ஜோஸ்.

Sharing is caring!