மீ டூ… விவகாரத்தில் கருத்து சொன்ன அனிருத்

சென்னை:
மீ டூ விவகாரத்தில் வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.

சமீபகாலமாக சமூகவலைதளங்களில் மீ டூ தான் அதிகம் இடம் பெற்றுவருகிறது. இந்த ஹேஸ்டாக் மூலமாக பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் கொடுமைகளை கூறிவருகின்றனர்.

சின்மயி – வைரமுத்து சர்ச்சை, சுசி கணேசன் – லீனா மணிமேகலை, ஸ்ரீரஞ்சனி – ஜான் விஜய் சர்ச்சை என அடுத்தடுத்து பேசப்பட்டு வருகிறது.சினிமா பிரபலங்கள் தான் இதில் அதிகம் சிக்குகின்றனர்.

இந்நிலையில் மீ டூ விவகாரத்தில் வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும் என இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!