மீ ரூ முலம் பணம் பறிக்க முயன்ற 2 நடிகைகள் கைது

தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ‘மீ டூ’வில் நடிகைகள் வெளிப்படுத்தி வருகிறார்கள். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலரது மறுமுகம் வெளிப்பட்டு, அவர்கள் சிக்கலுக்குள்ளாகினர்.

மீ டூ நடிகைகளுக்கு பாதுகாப்பு கேடயமாக உள்ளது. ஆனால் இதை சில நடிகைகள் பிழையாகவும் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.

தற்போது மீ டூவை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக ரோஹினி, ஷாரா சரவான் ஆகிய 2 மராத்தி நடிகைகள் பொலிசில் சிக்கி உள்ளனர். இவர்கள் பிரபல மராத்தி நடிகர் சுபாஷ் யாதவுடன் இணைந்து நடித்துள்ளனர்.

2 நடிகைகளும் சுபாஷ் யாதவை தொடர்புகொண்டு தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரப்பப் போவதாகவும், அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமானால் இருவருக்கும் ரூ.15 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர். நடிகைகளுக்கு 2 போலீஸ் அதிகாரிகள் உதவியாக இருந்துள்ளனர்.

இதனால் பயந்துபோன சுபாஷ் யாதவ் இருவருக்கும் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் அவர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோஹினி, ஷாரா சரவான் ஆகிய 2 நடிகைகளையும் கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த 2 போலீஸ் அதிகாரிகளும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

Sharing is caring!