முடித்துவிட்டேன்… என் காட்சிகளை முடித்து விட்டேன்… அருண் விஜய் டுவிட்

சென்னை:
பிரபாசின் சாஹோ படத்தில் தான் நடிக்கும் காட்சிகளை முடித்து விட்டாராம் அருண் விஜய்.

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் விஜய், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அருண் விஜய் அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கின்றனர். மதி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!