முடியலை… முயற்சி செய்கிறேன்… நடிகை ஜனனி பேட்டி

சென்னை:
பிக்பாஸ் வீட்டில் இருந்தது போல் இருக்க முயற்சி செய்கிறேன் என்று நடிகை ஜனனி தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பைனல்ஸ் முன்பு வரை வந்த போட்டியாளர் நடிகை ஜனனி. அவர் முதல் மூன்று இடங்களில் வருவார் என எதிர்பார்த்தவர்களுக்கு கடைசி நேரத்தில் அவர் வெளியேறியது அதிர்ச்சியே.

இந்நிலையில் நடிகை ஜனனி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது செல்போன், சமூக வலைதளங்களிலிருந்து விடுபட்டு இருந்தேன். சரியான நேரத்தில் தூங்குவது, சாப்பிடுவது என இருந்தேன். இப்போது அதை பின்பற்ற முடியவில்லை. ஆனாலும் முயற்சி செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!