முடியலை… வெளியில் வராமல் இருக்க செய்த முயற்சி தோல்வி

சென்னை:
சர்கார் பட கதை திருட்டு சம்பவம் செய்தி வெளியில் செல்லாமல் இருக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என நீதிமன்றம் வரை வழக்கு சென்றுள்ளது. சர்கார் கதையும் செங்கோல் என்ற கதையும் ஒன்றுதான் என எழுத்தாளர்கள் சங்கம் அளித்துள்ள ஒப்புகை சான்றிதழ் இன்று வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த சங்கத்தில் தலைவர் இயக்குனர் கே.பாக்யராஜ் கூறியிருப்பதாவது:

“தனிப்பட்ட முறையில் இந்தச் செய்தி வெளியே செல்லாமல் இருக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். அது சரியாக வரவில்லை. வருண் பெயருக்கு கொஞ்சமாவது கிரெடிட் கொடுக்குமாறு முருகதாஸிடம் கேட்டுகொண்டோம்.

ஆனால் அது தன்னுடைய கதைதான் என்பதில் முருகதாஸ் கடைசி வரை பிடிவாதமாக இருந்துவிட்டார். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று உறுதியாக இருந்தார்,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!