முட்டல், மோதல்… இயக்குனர் – தயாரிப்பாளர்! 96 ரீமேக் பணிகளில் பாதிப்பு?

ஐதராபாத்:
இயக்குனர், தயாரிப்பாளர் இடையில் ஏற்பட்ட மோதலால் 96 ரீமேக் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

96’ படத்தின் தெலுங்கு ரீமேக்குக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இயக்குநர், தயாரிப்பாளர் இடையேயான மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் ரிலீஸ் அன்றே பைனான்ஸ் சிக்கல் முதல் தயாரிப்பாளர் இல்லாமல் நூறாவது நாள் கொண்டாடியது வரை பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது.

தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு படத்தில் சர்வானந்த், சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணிகளில் ஒன்று இசை.

படத்தின் தெலுங்கு ரீமேக்கில், தமிழ் படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரை மாற்றிவிட்டு, தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரை இசையமைக்க வைக்கலாம் எனத் தயாரிப்பாளர் கூறிவருகிறார்.

இதனால், ‘தயாரிப்பாளர் ‘தில்’ ராஜு மற்றும் இயக்குனர் பிரேம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ எனவும் செய்திகள் வருகின்றன. இந்த சிக்கலால் இயக்குனர் மாற்றப்படலாம் என்கிறார்கள்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!