முண்டாசுப்பட்டி-2 படத்தில் நடிக்க தயார்

ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களில் நடித்தவர் விஷ்ணு. இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்ற நிலையில், அடுத்த படியாக முண்டாசுப்பட்டி-2 படத்தில் நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக சொல்கிறார் விஷ்ணு.

இதுகுறித்து ராட்சசன் படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் விஷ்ணுவிஷால் கூறுகையில், முண்டாசுப்பட்டி படத்தை காமெடி கதையில் இயக்கிய ராம்குமார், ராட்சசன் படத்தை அதில் இருந்து மாறுபட்டு சைக்கோ திரில்லர் கதையில் இயக்கினார். இரண்டு படங்களையுமே மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் அடுத்தபடியாக முண்டாசுப்பட்டி-2 படத்திலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார் விஷ்ணு.

மேலும், ராட்சசன் படத்தின் ரிலீசுக்கு முன்பு, ஒருவேளை இந்த படம் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்தபடி வசூல் கொடுக்காவிட்டால் நான் அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நான் ஈடுகட்டுவேன் என்று கூறியிருந்தேன். ஆனால் அப்படியொரு நிலை ஏற்படவில்லை. படம் வெற்றி பெற்று அவருக்கு லாபத்தை கொடுத்து விட்டது.

என்றாலும், அடுத்தபடியாக ராட்சசன் பட தயாரிப்பாளர் என்னை வைத்து படம் தயாரித்தால் அவர் என்ன சம்பளம் கொடுத்தாலும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றார் விஷ்ணு விஷால்.

Sharing is caring!