முதன்முறையாக அஜித் படத்திற்கு இமான் இசை

அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம். அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமைய்யா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதன்முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் டுவிட்டரில் அறிவித்துள்ளது.

மேலும் இப்படத்திற்காக நரைத்த தாடி, மீசையுடன் காணப்பட்ட அஜித், படப்பிடிப்பை முடித்ததும், அதை ட்ரீம் பண்ணி உள்ளார். படம், பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது.

Sharing is caring!