முதன்முறையாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் நடிக்கிறார்

சமந்தாவுடன் நடிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக அவரின் கணவர் நாக சைதன்யா கூறியுள்ளார்.

திருமணத்திற்குப் பின் சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் முதன்முறையாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கிறார்.

இந்தப் படம் சிவா நிர்வானா இயக்கத்தில் உருவாகிறது.

இந்தப் படம் பற்றி நேர்காணலொன்றில் நாக சைதன்யா தெரிவித்ததாவது,

இருவரும் இணைந்து பணியாற்றுவதால் ஒரே நேரத்தில் வீட்டிற்கு செல்கிறோம். ஆனால், காலையில் எனக்கு முன்பாகவே சமந்தா சென்றுவிடுவார். அதிக நேரங்களை நாங்கள் படப்பிடிப்புத் தளத்தில் செலவிடுகிறோம். இந்தப் படத்தில் நாங்கள் இருவரும் அதிகமாக சண்டை போட்டுக்கொள்வதாகக் காட்சிகள் உள்ளன. ஆனால், உண்மையில் நாங்கள் அப்படி இல்லை. இதனால் அந்த காட்சிகளில் நடிப்பது சற்று கடினமாக இருக்கிறது

என்று கூறியுள்ளார்.

Sharing is caring!