முதன்முறையாக மலையாளப் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி

சென்னை:
மலையாளத்தில் ஜெயராமுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதிக்கு நாளுக்கு நாள் மாஸ் கூடிக்கொண்டே செல்கிறது. அவரின் நடிப்பில் சீதக்காதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவரின் கெட்டப் பலரையும் கவர்ந்துவிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவர் நடித்துள்ள பேட்ட படம் வரும் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது. அதே போல தெலுங்கில் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்துள்ளார். இன்னும் மாமனிதன், சூப்பர் டீலக்ஸ் என படங்கள் அவருக்கு அடுத்ததாக வெளியாகவுள்ளது.

இதற்கிடையில் முதன்முறையாக மலையாள படத்திலும் அவர் நடிக்கவுள்ளாராம். இதில் ஜெயராம் ஹீரோவாக நடிக்க, விஜய் சேதுபதிக்கும் ஹீரோவுக்கு இணையான வேடமாம். இப்படத்தை சனில் கலத்தில் இயக்குகிறார். சத்யம் சினிமாஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறதாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!