முதல்நாளிலேயே பிரமாண்ட வசூல் வேட்டை ஆடிய சஞ்சு

மும்பை:
முதல்நாளிலேயே பிரமாண்ட வசூல் வேட்டை ஆடியுள்ளது இந்தி படமான சஞ்சு.

ரன்பீர் கபூர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் முழுவதும் வெளிவந்துள்ள படம் சஞ்சு. இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டுமே ரூ 32 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இந்த வருடம் இதுவரை வந்த படங்களில் சஞ்சு தான் முதல் நாள் அதிக வசூல் என கூறப்படுகின்றது. அமெரிக்காவில் சஞ்சு முதல் நாளே ரூ.4 கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளதாம்.

உலகம் முழுவதும் இப்படம் ரூ.50 கோடியை தாண்டிய வசூல் வந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!