முதல்நாளில் நல்ல வசூல் ஈட்டிய எல்கேஜி படம்

சென்னை:
ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள எல்கேஜி படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் ரூ. 2.6 கோடி வரை வசூல் செய்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள இப்படத்தில் ரசிகர்கள் கவனிக்கும் வகையில் சில விஷயங்கள் உள்ளது.

ஒன்று இளைஞர்கள் முழுவதும் வெறுக்கும் தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேசுகிறது, நாஞ்சில் சம்பத் நடிப்பது என சொல்லலாம். படத்திற்காக ஆர்.ஜே. பாலாஜி செய்யாத புரொமோஷனே கிடையாது. கடந்த சில வாரங்களாக தொலைக்காட்சியோ, சமூக வலைதளமோ எல்லாவற்றிலும் அவருடைய நிகழ்ச்சிகளாக இருந்தது.

வெற்றிநடைபோட்டு வரும் இப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் ரூ. 2.6 கோடி வரை வசூல் செய்துள்ளது. நல்ல விமர்சனங்களால் படம் வசூலில் மாஸ் காட்டும் என்று கூறப்படுகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!