முதல் நாள் முதல் சாதனை

அமிதாப்பச்சன், ஆமீர்கான், பாத்திமா சனா ஷேக், காத்ரினா கைப் மற்றும் பலர் நடித்த ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ படம் நேற்று உலகம் முழுவதும் ஹிந்தி, தெமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. படத்திற்கு எதிர்பார்த்த விமர்சனம் கிடைக்கவில்லை. 300 கோடி ரூபாய் செலவில் எந்தவிதமான ஈர்ப்பும் இல்லாத ஒரு சாதாரண படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது.

இருந்தாலும் படம் வசூல் ரீதியில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இந்த வருடத்தில் வெளிவந்த ஹிந்தித் திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் சுமார் 52 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

‘சஞ்சு’ படம் 34 கோடிகளையும், ‘ரேஸ் 3’ படம் 29 கோடிகளையும், ‘கோல்டு’ படம் 25 கோடிகளையும், ‘பாகி 2’ 25 கோடிகளையும் வசூலித்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதால் தான் இந்தப் படம் வசூலில் சாதனை புரிந்துள்ளது என்கிறார்கள். வரும் நாட்களில் படத்தின் வசூல் எதிர்பார்த்தபடி இல்லாமல் மிகவும் குறையும் என்றும் பாலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ‘சர்கார்’ படம் வெளிவந்திருந்தாலும் தமிழில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ள ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ படம் மாநகரங்களில் நன்றாக ஓடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Sharing is caring!