முதல் பட ஹீரோவை பிரமிக்க வைத்த சமந்தா!

சமந்தா கதாநாயகியாக நடித்த முதல் படம் மாஸ்கோவின் காவேரி. ஆனால் அதன்பிறகு அவர் கமிட்டாகி நடித்த பாணா காத்தாடி முதலில் வெளிவந்தது. பின்னர் மாஸ்கோவின் காவேரி வெளியானது. அந்த படத்தில் நாயகனாக நடித்தவர் ராகுல் ரவீந்தரன். அப்படம் வெற்றி பெறாததால் தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராகுல் ரவீந்தரன், தற்போது சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள யுடர்ன் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.

இதுபற்றி ராகுல் ரவீந்தரன் கூறுகையில், நானும், சமந்தாவும் ஒரே படத்தில் தான் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமானோம். ஆனால் இன்னும் எனக்கு சினிமாவில் ஒரு இடம் கிடைக்கவில்லை. சமந்தா, ஓரிரு படங்களிலேயே பெரிய நடிகையாகி விட்டார். இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள யுடர்ன் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். சமந்தாவின் இந்த வளர்ச்சி பிரமிப்பாக உள்ளது.

என்னிடம் ஆரம்பத்தில் பழகியது போலவே நட்பாக பழகும் சமந்தா, யுடர்ன் படத்தில் மிகச்சிறப்பான பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார். அவருடன் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் ராகுல்.

Sharing is caring!