முதல் பாடலே வெற்றி….3 வயது சிவகார்த்திகேயன் மகளுக்குதான்

பாடலாசிரியர் மற்றும் பாடகரான இருந்த அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் கானா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக உருவாகும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.  கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷும், அவரின் அப்பாவாக சத்யராஜும் நடிக்கிறார்கள்.

படத்திற்கு இசை திபு நினன் தாமஸ். படத்தைத் தயாரித்ததோடு இதில் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார் சிவா. கூடவே 3 வயதாகும் அவரின் மகள் ஆராதனாவையும் பாட வைத்திருக்கிறார். ‘வாயாடி பெத்த புள்ள’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை அப்பாவும் மகளும் க்யூட்டாகப் பாடும் வீடியோ தற்போது யூ ட்யூபில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

மழலை குரலில் பார்ப்பவர்களின் மனதை இதமாக்குகிறார் ஆராதனா. ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்குப் பிறகு அப்பா – மகள் அன்பை ‘க்யூட்னெஸ் ஓவர் லோடட்’ என்ற வார்த்தைக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.  இவர்களுடன் சேர்த்து வைக்கம் விஜய லட்சுமியும் இதனைப் பாடியிருக்கிறார்.  இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கும் இந்த வீடியோ யூ-ட்யூபில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Sharing is caring!