முந்தைய ஆண்டுகளை விட 2018ல் குறைவு

கடந்த ஆண்டு, அதாவது 2018ல் 181 திரைப்படங்களே வெளியாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளை விட இது குறைவு தான். கடந்த சில ஆண்டுகளா படங்களின் எண்ணிக்கை 200 கடந்த நிலையில், 2018-ல் இந்தளவுக்கு எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம், தமிழ் சினிமா உலகில் கடந்த ஆண்டுகள் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்தம் தான்.

வேலைநிறுத்தம் நடைபெற்ற நாட்களில் எந்த ஒரு புதிய திரைப்படமும் வெளியாகவில்லை. வேலைநிறுத்தம் நடைபெறாமல் இருந்திருந்தால் சுமார் 25 படங்கள் கூடுதலாக வெளிவந்திருக்கும். மேலும் பட எண்ணிக்கை குறைந்ததற்கு, ரிலீசுக்கு தயாரான நிலையில் படங்களை வெளியிட போதுமான தியேட்டர்கள் கிடைக்காததும் முக்கிய காரணமாக அமைந்தது.

அறிமுகம் இல்லாத நடிகர், நடிகைகள் நடித்த படங்கள், சிறு முதலீட்டு படங்களுக்கு அவ்வளவு எளிதில் விநியோகஸ்தர்களோ, தியேட்டர்களோ கிடைப்பதில்லை. தங்களது படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் போகும்போது, அப்படங்களின் ரிலீஸை தள்ளி வைப்பதும், இந்த எண்ணிக்கை குறைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

Sharing is caring!