முன்னணி நடிகராக விளங்கும் தனுஷ் இயக்குநர் ஆனார்

முன்னணி நடிகராக விளங்கும் தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் நடித்த பவர்பாண்டி இயக்குநராகவும் தனுஷுக்கு வெற்றியைக் கொடுத்தது.

பவர் பாண்டி படத்தின் ப்ளாஷ்பேக்கில் ராஜ்கிரணின் சின்ன வயது வேடத்தில் தனுஷும், ரேவதியின் சின்ன வயது வேடத்தில் மடோனா செபாஸ்டியனும் நடித்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்தார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்தது.

பவர் பாண்டி சிறந்த படமாகப் பேசப்பட்ட அளவுக்கு கமர்ஷியலாக வெற்றியைக் கொடுக்கவில்லை. எனவே அடுத்தப்படத்தை இயக்குவது பற்றி முடிவெடுக்காமலே இருந்தார்.

இதற்கிடையில் ‘பவர் பாண்டி’யைத் தொடர்ந்து ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வரலாற்றுப் படமொன்றை தனுஷ் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. பைனான்ஸ் பிரச்சினையில் தற்போது ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் இருப்பதால், தனுஷ் படத்தை தயாரிக்கவில்லை.

இந்நிலையில், தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் தனுஷ். அந்தப்படத்துக்கு லொகேஷன் பார்ப்பதற்காகத் திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Sharing is caring!