முன்னணி ஹீரோக்களுக்கு தமிழில் அறிமுகமாக வேண்டும் என்ற ஆசை

தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள சில முன்னணி ஹீரோக்களுக்கு தமிழில் அறிமுகமாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசையின் காரணமாக கடந்த ஆண்டு ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ் பாபு, தமிழில் அறிமுகமானார். ஆனால், இருவருக்குமே தோல்வி தான் கிடைத்தது.

இப்போது, முருகதாசின் சிஷ்யரான ஆனந்த் சங்கர் ‘நோட்டா’ படம் மூலம் விஜய் தேவரகொன்டா-வை தமிழுக்குக் கொண்டு வருகிறார். இப்படத்தின் வெளியீடு அக்டோபர் 5 என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகரை தமிழுக்குக் கொண்டு வந்து குரு தோற்றாலும், அவருடைய சிஷ்யர் ஆனந்த் சங்கர் மற்றுமொரு தெலுங்கு நடிகரை கொண்டு வந்து வெற்றி பெறுவாரா என்பது தமிழ், தெலுங்குத் திரையுலகத்தின் கேள்வியாக உள்ளது.

தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் விஜய் தேவரகொன்டா, இந்த ‘நோட்டா’ மூலம் அதிக வாக்குகுளைப் பெற்று வெற்றி பெறுவாரா.? என்பது இரண்டு வாரத்தில் தெரிந்துவிடும்.

Sharing is caring!