மும்தாஜை டார்க்கெட் செய்யும் டாஸ்க்… பரபரப்புக்காகவா!

சென்னை:
மும்தாஜை டார்க்கெட் செய்வது போலவே டாஸ்க்… நிகழ்ச்சி இன்ரெஸ்ட் ஆக திட்டமா என்று ரசிகர்கள் கேட்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நடிகை மும்தாஜை டார்கெட் செய்வது போன்ற இமேஜை உருவாக்கியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த சில நாட்களாக மும்தாஜை டார்கெட் செய்யும்படியான டாஸ்க்குள் ஸ்பெஷலாக கொடுக்கப்பட்டிருப்பதாக பார்வையாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

மும்தாஜ்-ஷாரிக் மோதல், மும்தாஜ்-மகத் மோதல், மும்தாஜ்-டேனி மோதல், என இந்த வாரம் டீமில் உள்ள சில ஆண் போட்டியாளர்களிடம் மும்தாஜ் வம்பு வளார்த்துவிட்டார்.

இத்துடன் இந்த மோதல் முடியும் என்று பார்த்தால், தொடர்கதை கணக்காக இன்று பொன்னம்பலத்திடமும் வம்பு தான் போல. இந்த உலகில் யார் மீது பாசம் வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என யாஷிகாவிடம் மும்தாஜ் வருந்த அன்ன காரணமாக இருக்கும் என்ற யோசனையை இன்றைய புரொமோ வீடியோ ஏற்படுத்தியுள்ளது.

புதிய புரொமோ வீடியோவில் தோசை சாப்பிட்டதெல்லாம் ஒரு மேட்டர்னு மும்தாஜை பொன்னம்பலம் விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல் ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு தான் காட்டு கத்து கத்துவார்கள். ஒய் திஸ் கொலவெறி பிக் பாஸ் என நெட்டிசன்கள் வெறுத்து ட்வீட்டி வருகின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!