முருகதாஸ் கைது செய்யப்படலாம்
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் சர்கார். இந்த படத்தல் அரசின் இலவச பொருட்களுக்கு எதிரான கருத்துக்கள் இருந்ததால் சர்ச்சைகள் எழுந்தது. அதையடுத்து அந்த காட்சி நீக்கப்பட்டது. முருகதாஸ் கைது செய்யப்படலாம் என்கிற நிலை இருந்தது. அதனால் அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், தற்போது அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு சார்பில் வாதிடும்போது, அரசை விமர்சித்த முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும், இனி அது போன்ற காட்சிகளை எதிர்காலத்தில் வைக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என முன் வைக்கப்பட்டது. இதை முருகதாஸ் ஏற்க மறுத்ததோடு, மன்னிப்பும் கேட்க முடியாது, இது எனது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகி விடும் என கூறிவிட்டார்.
இந்த நிலையில், முருகதாஸின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் விடுத்துள்ள செய்தியில், சர்கார் படம் மத்திய தணிக்கைக்குழுவினால் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தை ஒடுக்க அரசு முயற்சிக்கிறது. தோற்கடிக்கப்பட்ட பாஸிசம் மீண்டும் தலைதூக்குகிறது. இது ஜனநாயக முறையல்ல என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.