முருகதாஸ் மட்டுமல்ல… வினோத் இயக்கத்திலும் நடிக்கிறாரா ரஜினி?

சென்னை:
இன்ப அதிர்ச்சி… முருகதாஸ் மட்டுமின்றி வினோத் இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த பொஙலுக்கு பேட்ட படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ரஜினி கட்சி வேலையில் இறங்குவார் என கூறப்பட்டது.

ஆனால், ரஜினி மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் வேலையில் முருகதாஸ் பிஸியாகவுள்ளார்.

மேலும், ரஜினியிடன் சதுரங்கவேட்டை வினோத் ஒரு கதை சொன்னாராம், அதை ரஜினி கொஞ்சம் மாற்றி வாருங்கள் செய்யலாம் என்று கூறியதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இதில் ரஜினி மட்டுமின்றி தனுஷும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது,

வினோத் தற்போது அஜித் நடிக்கும் பிங்க் படத்தின் ரீமேக்கை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!