முருகதாஸ் – விஜய் இணையும் படங்கள் வெற்றி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வௌியீட்டு விழா, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாய் நடந்தது. இசையை புதுமையாக ரசிகர்களே வெளியிட்டனர். இதற்காக பிரத்யேக இணையதளம் துவக்கப்பட்டு, அதை ரசிகர்களே வௌியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது : நன்றி நண்பா என்று பேச்சை ஆரம்பித்த விஜய், ரசிகர்களின் ஆரவுக்கு நன்றி. இந்த விழாவின் நாயகன் ரஹ்மான். ஆளப்போறான் தமிழன் பாடல், தமிழர்களின் அடையாளம். ஒரு விரல் புரட்சி ஒட்டுமொத்த மக்களின் அடையாளம்.

ரஹ்மான் இசையமைத்து இருப்பது சர்காருக்கு ஆஸ்கர் கிடைத்த மாதிரி. அவருடன் விவேக் இணையும் போது இன்னும் மேஜிக் ஆகிவிடுகிறது.

நாங்கள்(முருகதாஸ் – விஜய்) இணையும் படங்கள் வெற்றி படங்களாக அமைந்துவிடுகின்றன. சர்காரில் என்ன ஸ்பெஷல் என்றால், மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியலில் மெர்சல் செய்திருக்கிறார்.

சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்தில், சாவித்ரி வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார், கீர்த்தி சுரேஷ் பாராட்டுகள். வர லட்சுமியை வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்கிற அளவுக்கு வரலட்சுமி சிறப்பாக நடித்திருக்கிறார். யோகி பாபுவின் வளர்ச்சியை பார்த்து வியந்தேன்.

வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம், ஆனால், வெற்றி அடையக்கூடாது என்பதற்காகவே ஒரு கூட்டம் உழைக்கிறது. வாழ்க்கை என்ற விளையாட்டை பார்த்து விளையாடுங்க.

இந்த டயலாக் யார் சொன்னது என்று தெரியவில்லை. ஆனால் நான் பாலோ செய்கிறேன். உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னு இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்குமாம். உண்மைதான் இது என் வாழ்க்கையில் சரியாக பொருந்துகிறது. நீங்களும் அதை பின்தொடருங்கள்.

சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்க போகிறோம். நான் படத்தை சொன்னேன். பிடித்திருந்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள். சர்கார் படத்தில் முதல்வராக நடிக்கவில்லை. ஒருவேளை நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன்.

ஒரு மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் எல்லாமுமே சரியாக இருக்கும். இறப்பு சான்றுக்கு கூட காசு தர வேண்டியிருக்கிறது. தலைவன் நல்லவனாக இருந்தால் அந்தக்கட்சி நன்றாக இருக்கும். எப்போதுமே தர்மம் தான் ஜெயிக்கும், ஆனால் கொஞ்சம் தாமதமாக ஜெயிக்கும்.

இவ்வாறு விஜய் பேசினார்.

Sharing is caring!