மைக்கல்… விஜய்யின் அடுத்த படத்தில் டைட்டில்?

சென்னை:
இதுதான் விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில் என்று மைக்கல் என்ற பெயர் இணையத்தில் உலா வருகிறது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிக்கு பிறகு உலகம் முழுவதும் பெரிய மார்க்கெட் வைத்திருப்பது விஜய் தான். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் பாடல் காட்சிகள் சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்டதாம், இதில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கல் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் இணையத்தில் தளபதி 63 டைட்டில் பெரும்பாலும் CM (C.மைக்கல்) ஆக இருக்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சிலர் வெறித்தனம் என்றும் டைட்டில் இருக்கும் என கூறி வருகின்றனர், இதில் எது உண்மை என்பதை படக்குழு சொன்னால்தான் தெரியும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!