மைக்ரோ தியேட்டர்களை உருவாக்கும் ஷோபனா

தெலுங்கானா அரசுடன் கைகோர்த்து கிராமங்கள் தோறும் மைக்ரோ தியேட்டர்களை நிர்மாணித்து சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளார் சீனியர் நடிகை ஷோபனா. இந்தப்பொறுப்பை ஷோபனாவின் ‘ஜடூஸ் சென்டர்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் பைலட் புராஜெக்ட்டை ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள துமுருலு என்கிற ஊரில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இதற்காக தெலுங்கானா அரசு நடத்திய துவக்க விழாவில் ஷோபனா கலந்து கொண்டார். இதை தொடர்ந்து சுமார் 5௦௦ கிராமங்களில் 7௦௦ கோடி ரூபாய் செலவில் மைக்ரோ தியேட்டர்கள் அமைக்கப்பட்ட உள்ளன. அதுமட்டுமல்ல ஒவ்வொரு தியேட்டரிலும் ‘சாய் நாஷ்டா கபே’ என்கிற கேன்டீனையும் அமைக்க உள்ளனர்.

Sharing is caring!