மோகன்லாலின் “ஓடியன்” வெளியீடு தள்ளிப்போனது

நீரளி படத்திற்கு பிறகு மலையாள நடிகர் மோகன் லால் நடித்து வரும் படம் ‘ஒடியன்’. இதனை ஸ்ரீகுமார் மேனன் இயக்கியிருக்கிறார். மோகன் லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், சித்திக், இன்னொசன்ட், நரேன், கைலாஷ், சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒடியன் மாணிக்கன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மோகன்லால், இளமையான தோற்றத்தைக் கொண்டு வர 18 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார்.

எம்.ஜெயச்சந்திரன் பாடல்களுக்கும் சாம்.சி.எஸ் பின்னணிக்கும் இசையமைக்கிறார்கள், ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜான் குட்டி படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். தேசிய விருது பெற்ற ஹரிகிருஷ்ணன் என்பவர் இதற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஃபேன்டஸி த்ரில்லரான இதனை 3D தொழில்நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

‘ஆசிர்வாத் சினிமாஸ்’ நிறுவனம் இதனை மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் மோஷன் போஸ்டர், மேக்கிங் வீடியோக்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அக்டோபர் 11-ம் தேதி ஒடியன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்கள் படக்குழுவினர். ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் படி டிசம்பர் 14-ம் தேதி திரையிட திட்டமிட்டிருக்கிறார்களாம் ஒடியன் குழுவினர்.

Sharing is caring!