மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்கிய படம் 28ம் தேதி ரிலீஸ்

கேரளா:
மோகன்லாலை வைத்து நடிகர் பிரித்விராஜ் இயக்கி உள்ள படம் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மலையாள உலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலை வைத்து, நடிகர் பிரித்விராஜ் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள லூசிபர் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கி உள்ளார். மொழி, ராவணா உள்பட பல படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். இந்த படத்தில் மஞ்சு வாரியர், தொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

அரசியல் திரில்லர் கதைக்களம் கொண்ட இந்தப் படம் வர்த்தக அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் மார்ச் 28-ந்தேதியன்று வெளியாக உள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி – பத்மா மகன், திருச்சி

Sharing is caring!