மோகன்லால் படத்திற்காக அமைச்சரை சந்தித்த பிருத்விராஜ்

முதன்முறையாக டைரக்சனில் இறங்கவுள்ள நடிகர் பிருத்விராஜ், லூசிபர் என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்க உள்ளது.. இந்தப்படத்தின் கதைக்களத்தின் பெரும்பகுதி திருவனந்தபுரம் நகரத்திலேயே நிகழ்கிறதாம்.

அதனால் திருவனந்தபுரத்தில், குறிப்பாக அரசு அனுமதி கிடைப்பதற்கு சிரமமான சில இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள். இதற்காக சிறப்பு அனுமதி வேண்டி கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து பேசியுள்ளார் பிருத்விராஜ்.

லூசிபர் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர், அவர்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக வாக்களித்தாராம்.

Sharing is caring!