யதார்த்தமாக படகமாக்கப்பட்ட ”வடசென்னை”

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து, கடந்தவாரம் வெளியான படம் வட சென்னை. வட சென்னை மக்களின் வாழ்வியலை சொன்ன இப்படம் யதார்த்தமாக படமாக்கப்பட்டிருந்தாலும் வன்முறைகள், கெட்டவார்த்தைகள் போன்றவை நிறைந்துள்ளன.

இதனால் இப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. வட சென்னை மக்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி சார்லஸ் என்கிற வக்கில் போலீஸில் புகார் கூறியுள்ளார். இந்நிலையில் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என வெற்றிமாறன் தெரிவித்திருப்பதோடு மன்னிப்பும் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், எங்களுடைய நோக்கம் யாரையும் புண்படுத்துவது அல்ல. வடசென்னை படத்தில் மீனவர் சமூகத்தை புண்படுத்தும் காட்சிகள், குறிப்பாக கப்பலில் நடக்கும் முதலிரவு காட்சியை நீக்க முடிவு செய்துள்ளோம். தணிக்கை சென்று அதை நீக்க 10 நாட்களாகும். யாரையும் புண்படுத்தி சினிமாவில் பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கம் அல்ல.

வடசென்னை இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களில், அந்தமக்கள் எப்படியெல்லாம் அடிப்படை வாழ்வாதார பிரச்னைகளையும், நெருக்கடிகளையும் சந்திக்கிறார்கள், அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை பதிவு செய்ய உள்ளோம்.

வடசென்னை படத்தில் வரும் படைப்புகள், கதாபாத்திரங்கள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம், மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு வெற்றிமாறன் கூறியுள்ளார்.

Sharing is caring!