யாத்ரா படத்தின் தமிழ் டீசரை வெளியிட்டுள்ளனர்

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. ஒய்எஸ்ஆராக மம்முட்டி நடிக்கிறார். மகி ராகவ் இயக்குகிறார்.

ஒய்எஸ்ஆர்., அரசியல் பயணத்தில் முக்கிய நிகழ்வாக அமைந்த, அவர் ஆந்திராவில் நடைபயணமாக சுற்றுப்பயணம் செய்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படம் தெலுங்கில் உருவானாலும், தமிழிலும் டப் செய்து வெளியிட உள்ளனர். அதன்முன்னோட்டமாக தற்போது யாத்ரா படத்தின் தமிழ் டீசரை வெளியிட்டுள்ளனர். பிப்.,8ம் தேதி படம் மூன்று மொழிகளிலும் ரிலீஸாகிறது.

Sharing is caring!