யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம் …….காதலர் இவரா?????

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘யாரடி நீ மோகினி’ தொடரில் நடித்து வரும் நட்சத்திரா குட்டிசேரி திருமணம் செய்யது கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நட்சத்திரா பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளாவில் தான். ஆனால், சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார்.

இவர் முதன் முதலில் சினிமாவில் தான் அறிமுகமாகியுள்ளார். முதன் 2016 ஆம் ஆண்டு ஜெயக்குமார் என்பவர் இயக்கிய ‘கிடா பூசாரி மகுடி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராம்தேவ் என்பவர் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் சரிவர வாய்ப்பு அமையாததால் சீரியல் பக்கம் திரும்பியுள்ளார்.

தற்போது சின்னத்திரையில் கலக்கி வரும் இவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் அறிமுகமான கிடா பூசாரி மகுடி படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ராம்தேவை தான் இவர் திருமணம் செய்துகொள்ள போகிறாராம்.

அந்த படத்தில் நடித்த போதே போகிறாராம். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. தற்போது இவர்கள் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடம் நடைபெற இருக்கிறது.

இதேவேளை, திருமண செய்திகள் வைரலானதும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் நடிப்பினை நிறுத்தி விடுவாரா இல்லை சின்னத்திரையில் பார்க்கலாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Sharing is caring!