யாஷிக்காவிடம் காதலை சொன்ன மகத்….ஏன் கமல் முன் சொல்லவில்லை?

வீட்டின் பெரிய மனிதரான பொன்னம்பலம் எவிக்டாகி வெளியேறிவிட்டார். தற்போது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருடையே முழு கவனமும் பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே. அதற்காக அவர்கள் செய்யும் வேலைகள் சுவாரஸ்மாக இருந்தாலாவது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் புறம் பேசி வெற்றி பெற நினைக்கிறார்கள்.

57ம் நாள் பிக்பாஸ் வீட்டில்…

கமல் உடனான உரையாடல்களுக்கு பிறகான காட்சிகள் தொடர்ந்தன. “நீங்க சொன்ன மாதிரியே பொன்னம்பலம் வெளிய போயிட்டார் சந்தோஷமா” என  மும்தாஜிடம் கேட்டார் சென்றாயன். முன்னதாக பொன்னம்பலம் தான் வெளியே செல்வார் என்று மும்தாஜ் கூறினராம். அது போலவே நடந்து விட்டதால் சென்றாயன் அப்படி கேட்டார். ஜனனி வெளியேறுவது குறித்து பயந்துவிட்டதால் தான், அவரை சமாதானப்படுத்த அவ்வாறு கூறியதாக மும்தாஜ் கூறினார். ஒவ்வொரு முறையும் ஜனனி நாமினேட் ஆகும் போதும் அவர் வெளியேறிவிடுவோம் என்ற பயத்தில் இருப்பது தெரிகிறது.

உனக்கு நான் எதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா மும்தாஜ் அப்படி செய்ய விடாம தடுக்குறாங்க என்று யாஷிக்காவிடம் பேசிக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. நேற்றைய நிகழ்ச்சியில் பல சீன்களில் மும்தாஜ் குறித்து யாஷிக்காவிடம் ஐஸ்வர்யா பேசிக்கொண்டே தான் இருந்தார். ஜனனிக்கும் மும்தாஜுக்கும் இடையே நடந்த பனிப்போர் முடிந்து, தற்போது மும்தாஜுக்கும் ஐஸ்வர்யாவுக்கு இடையே பனிப்போர் தொடங்கி உள்ளது. இது போன்று பேசும் போது ஐஸ்வர்யாவுக்குள் தூங்கி கொண்டு இருக்கும் சர்வாதிகாரி எட்டிப்பார்க்கிறார்.

மற்றொரு பக்கம் யாஷிக்கா- மகத் இடையேயான உறவு குறித்து மற்றவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். யாஷிகா அத்தனை பேர் முன் மகத்தை காதலிப்பதாக கூறனார். ஆனால் தனக்கு வெளியே பாய்ஃபிரெண்ட்  இருப்பது பற்றி பேசவில்லை என்று ஜனனி கூறினார். அதற்கு. “மகத் பல முறை யாஷிக்காவிடம் ஐ லவ் யூ என கூறியிருக்கிறார். ஆனால் அத்தனை பேர் முன்னும் கமல் சாரிடம் ஏன்  கூறவில்லை” என மும்தாஜ் பேசினார்.

Sharing is caring!