யுனிசெப்பில் இருந்து பிரியங்கா சோப்ராவை நீக்க பாக்., வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்:
பாலிவுட் நடிகை பிரியங்காவை யுனிசெப்-ல் இருந்து நீக்க பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.

‘யூனிசெப்’ எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நிதியத்தின் சர்வதேச நல்லெண்ண துாதர் பதவியிலிருந்து, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்கும்படி, பாகிஸ்தான், போர்க்கொடி தூக்கியுள்ளது.

பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகை பிரியங்கா சோப்ரா, இவர் விஜய் ஜோடியாக தமிழன் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர், 2016 முதல், யூனிசெப் நல்லெண்ண துாதராக செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை, இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்ததை பாராட்டி, பிரியங்கா சோப்ரா, சமூக வலைதளத்தில் ‘ஜெய்ஹிந்த்; இந்திய ராணுவத்துக்கு வாழ்த்துக்கள்’ என, பதிவிட்டிருந்தார்.

இது, பாகிஸ்தான் தரப்புக்கு, பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் ஐ.நா., குழந்தைகள் நிதியத்தின் சர்வதேச நல்லெண்ண துாதர் பதவியிலிருந்து, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்கும்படி, பாகிஸ்தான் போர்க்கொடி தூக்கியுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!