யுவன் சங்கர் ராஜாவுக்காக இவ்வளவு பிரபலங்களா?

பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் கே பிரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் எலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பியார் பிரேமா காதல். பிக்பாஸ் புகழ் ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் போஸ்டர்கள் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கடந்த வாரம் டிரெய்லர் வெளியாகி இருந்தது. கலர்ஃபுல்லாக இருந்த அந்த டிரைலரும் இணையத்தை கலக்கியது.

மேலும் சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியானது. மொத்தம் 12 பாடல்கள் இப்பட ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. இது யுவன் சங்கர் ராஜா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா, சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, ஆர்யா, சிவகார்த்திகேயன், இயக்குநர் அமீர், இயக்குநர் ராம், இசையமைப்பாளர்கள் அனிருத், இமான், சந்தோஷ் நாராயணன், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, இயக்குநர் செல்வராகவன், அதர்வா, ஜெய், இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, இயக்குநர் வெற்றி மாறன், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், கிருஷ்ணா என பெரிய நட்சத்திர பட்டாலமே கலந்து கொள்ள இருக்கின்றன.

Sharing is caring!