யு நாட் எக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது… சூப்பர் டீலக்ஸ் விநியோக உரிமையை கைப்பற்றியது!!!

சென்னை:
சூப்பர் டீலக்ஸ் படத்தின் விநியோக உரிமையை யு நாட்எக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் விநியோக உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும் படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒய் நாட் ஸ்டூடியோஸின் சசிகாந்த் யு நாட்எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சூப்பர் டீலக்ஸ் படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார். யு நாட்எக்ஸ் வெளியிடும் முதல் படம் சூப்பர் டீலக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!