யோகிபாபுவின் அம்மாவாக பிரபல நடிகை

யோகி பாபு என்று சொன்னதுமே எல்லோரின் மனதிலும் பளிச்சென தெரிவார் பிரபல காமெடி நடிகர். தற்போது சினிமாவில் காமெடியில் உச்சத்தில் இருப்பது அவர் தான். பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகிறது.

தர்மபிரபு என்ற படத்தில் ஹீரோவாக அவர் நடித்து வருகிறார். எமலோகத்தை மையப்படுத்திய இப்படத்தில் அவர் எமதர்மனான நடித்து வருகிறார். இதில் அவருடன் ராதா ரவி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், ஜனனி ஐயர், மாஸ்டர் கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் யோகி பாபுவுக்கு அம்மாவாக பிரபல நடிகை ரேகா நடித்துள்ளாராம். இவர் 90 களில் முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின்கள் லிஸ்டில் இருந்தார். திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும் இவர் தற்போது அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

Sharing is caring!