ரசிகர்கள் குழப்பம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். டார்ஜிலிங், டேராடூன் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதோடு, தமிழகத்தின் சில இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கல் நாளில் படத்தை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. இந்தப் படத்தை முடித்துக் கொடுத்தக் கையோடு, ரஜினி, சினிமாவுக்கு பை சொல்லி விட்டு, முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறி வருகிறார். இதை எதிர்பார்த்து, அவரது ரசிகர்களும் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘சர்க்கார்’ படத்தை முடித்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரவி இருக்கிறது. இதையடுத்து, ரஜினியின் தீவிர் அரசியலில் ஆர்வத்துடன் இருந்த அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது

Sharing is caring!