ரசிகர்கள் மீது சரிந்த வேலி… ஓடிச் சென்று பிடித்த நடிகர் விஜய்

சென்னை:
ரசிகர்கள் மீது வேலி சரிந்து விழுந்ததை கண்டு பதறி போய் உள்ளார் நடிகர் விஜய். உடன் அந்த வேலியை உயர்த்தி பிடித்துள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

நடிகர் விஜய் தற்போது தளபதி 63 ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். அவரை காண ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினம்தோறும் குவிந்து விடுகின்றனர். அவர்களை தவறாமல் தினமும் விஜய் சந்தித்து கையசைத்து நன்றி தெரிவித்து விட்டு செல்வார்.

இன்றும் அப்படி தான் நடந்தது. ஆனால் அதிக ரசிகர் கூட்டத்தால் வேலி சரிந்து விழுந்தது. அதில் ரசிகர்கள் சிலரும் இருந்தனர். அதை பார்த்த விஜய் உடனே ஓடி சென்று அந்த வேலியை பிடித்துள்ளார்.

மற்றவர்களும் விஜய்க்கு உதவியாக சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!