ரஜனியின் 167 வது படம் தர்பார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 167வது படம் தர்பார் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநயாகியாக நயன்தாரா இணையவுள்ளார்.  அனிரூத் இசையமைக்கிறார். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். தர்பாரில், ரஜினிகாந்த் போலீஸ் மற்றும் சமூக சேவகர் என இரட்டை வேடங்களில் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2020ம் ஆண்டு பொங்கலுக்கு தர்பார் படத்தை வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு 60 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், படம் முழுவதும் மும்பையிலேயே எடுக்கவுள்ளதாகவும் தெரிகிறது.  படப்பிடிப்புக்காக இன்று மும்பை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், 18ம் தேதி நடைபெறும் வாக்குபதிவுக்காக சென்னை வரவுள்ளார்.

Sharing is caring!