ரஜினிகாந்த் ஆச்சரியத்துக்குரிய மனிதர்

17இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகின்ற ‘பேட்ட’ படத்தில், சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், பாபிசிம்ஹா, விஜய் சேதுபதி ஆகியோருடன் இந்தி நடிகரான நவாஸுதீன் சித்திக் (Nawazuddin Siddiqui) இணைந்து நடிக்கின்றார்.

முதல்தடவையாக தமிழ் படமொன்றில் நடிக்கின்ற நவாஸுதீன் சித்திக், ரஜினிகாந்த் ஆச்சரியத்துக்குரிய மனிதர். அவருடன் நடிப்பதற்கு பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருவர். நாட்டிலேயே பெரிய சூப்பர் ஸ்டாரான அவரின் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

ஆனால், இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் எளிமையாக இருக்கிறார். அவரை முதல்தடவை பார்த்தபோது மிகவும் யதார்த்தமாகப் பேசினார். அவரும் நம்மைப் போன்றவர்தான் என எமக்கு உணர்த்துகிறார் எனக் கூறியுள்ளார்.

அத்தோடு, மராத்தி, குஜராத்தி போன்ற மொழிகள் இந்தி மொழிநடைக்கு ஒத்திருப்பதால் பேசுவதற்கு எளிதாக உள்ளன. ஆனால், தமிழில் பேசி நடிப்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகவே இருக்கிறது என ‘பேட்ட’ படத்தில் தமிழில் பேசி நடிப்பது குறித்து நவாஸுதீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!