ரஜினிக்கு இன்ட்ரோ சாங் பாடும் பிரபல பாடகர்

ரஜினி காந்தின் 167வது படத்தை, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினிக்கு கதாநாயகியாக நயன்தாரா இணைந்துள்ளார். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்திற்கு, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தர்பாரில், ரஜினிகாந்த் போலீஸ் மற்றும் சமூக சேவகர் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மேலும், 2020ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தர்பார் படத்தில் ரஜினிக்கான இன்ட்ரோ சாங்கை எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Sharing is caring!