ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் ஸ்டார்ட்?

சென்னை:
ரஜினி – முருகதாஸ் இணையும் படம் வரும் மார்ச் மாதத்தில் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ரஜினியின் 2.0 படம் வெளியாகிவிட்டது, வசூல் வேட்டையை நடத்த ஆரம்பித்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் ரஜினியையும் 2.0 படக்குழுவினரையும் பாராட்டி வருகின்றனர்.

இப்படி 2.0 பட கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது. பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி, முருகதாஸுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறார்கள்.

இப்புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் 2019 மார்ச் மாதத்தில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. இந்த புதிய படம் 2020 ஆரம்பத்தில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!