ரஜினியின் அடுத்த படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்?

சென்னை:
ரஜினியின் அடுத்த படத்தை முருகதாஸ் இயக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகினது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சர்கார் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளார். தற்போது முருகதாஸ்-ரஜினியுடன் இணையும் படம் குறித்து தான் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. படத்தை லைகா நிறுவனமே தயாரிப்பதாக கூறுகின்றனர். ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக தேசிய விருது பெற்ற சந்தோஷ் சிவன் கமிட்டாகி இருப்பதாக செய்திகள் உலா வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!