ரஜினியின் அடுத்த படத்தில் சேர்ந்து நடிப்பாரா தனுஷ்!

சென்னை:
ரஜினியின் அடுத்த படத்தில் தனுசும் சேர்ந்து நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஜினியின் 2.0 படம் ரிலீசாகி செமத்தியாக கல்லா கட்டியது. இதையடுத்து பொங்கலுக்கு வருது பேட்ட படம். இப்படத்தின் ஷூட்டிங், ஆடியோ விழா எல்லாம் முடிந்த பிறகு ரஜினி குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை ஏ. ஆர். முருகதாஸ்  இயக்கவுள்ளதாகவும், இது அரசியலை பிரதானமாகக் கொண்டு உருவாவதாகவும் தகவல் கசிந்த வண்ணம் உள்ளன.

மேலும், அஜித்தை வைத்து ‘பிங்க்’ படத்தை தமிழில் இயக்க இருக்கும் எச்.வினோத் அப்படத்தை முடித்த பிறகு ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின்றன.

இதில் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்தி பரவுகிறது.  இதனால் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். முருகதாஸ் படத்திற்கு முன்பே வினோத்தின் படத்தில் ரஜினி நடித்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!