ரஜினியின் அடுத்த படத்தில் நயன்தாரா ஹீரோயின்? எதிர்பார்ப்பு எகிறல்

சென்னை:
ரஜினியின் அடுத்த படத்தில் நயன்தாரா நடிப்பாரா என்பதுதான் தற்போதைய பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி தனது 166வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க அரசியலை மையக்கருத்ததாக கொண்ட படம் என கூறப்படும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க நயன்தாராவை ரஜினி பரிசீலித்தாராம். இதனால் படத்தின் கதையை நயன்தாராவிடம் ஏ.ஆர்.முருகதாஸ் கூற, யோசித்து கூறுகிறேன் என அவர் கூறிவிட்டராம்.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையில் இருந்த நயன்தாரா அஜித்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் தளபதி-63 படங்களில் நடிக்க ஒத்து கொண்டது போல ஒருவேளை இப்படத்தில் நயன்தாரா நடித்தால் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு ரஜினியின் ஜோடியான நடிகை என்ற பெயரை பெறுவார். இந்த படத்தில் நயன்தாரா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!