ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது முருகதாஸ்?

சென்னை:
ரஜினியின் அடுத்த படத்தை முருகதாஸ் இயக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் உலா வருகிறது.

ரஜினி அரசியல் வருவேன் என்று கூறியிருந்தார், அதற்கான முழு பணியில் அவர் இன்னும் ஈடுபடவில்லை. அதேசமயம் படங்களில் அடுத்தடுத்து பிஸியாக கமிட்டாகி நடித்து வருகிறார்.

வரும் நவம்பர் 29ம் தேதி 2.0 படம் ரிலீஸ் ஆகிறது. அடுத்து பொங்கலுக்கு பேட்ட ரிலீஸ். தற்போது இரண்டு படங்களுக்கான புரொமோஷன் வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ரஜினி அடுத்த படத்திற்காக ஏ.ஆர். முருகதாஸ் கதையை ஓகே செய்துள்ளதாகவும், அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!