ரஜினியின் அடுத்த படம் நாற்காலி… முழுக்க அரசியல் கதையாம்ட!!!

சென்னை:
நாற்காலி… ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு இதுதானாம். முழுக்க முழுக்க அரசியல் கதை என்று தகவல்கள் உலா வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் நாளை ரிலீஸாகிறது. இப்படத்தை அடுத்து அவர் ஏ.ஆர். முருககாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நாற்காலி என்று பெயர் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சாதாரண ஒரு கட்சியின் தொண்டனாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் முன்னேறி முதல்வராவதுதான் இந்த படத்தின் கதை களம். சில காட்சிகளில் அமைதிப்படை ஸ்டைலில் அரசியல் காட்சிகளும், கிண்டல்களும் இருக்குமாம்.

ரஜினி அரசியலுக்கு வரும் ஐடியாவில் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இந்த படத்தில் நிறைய அரசியல் பேசப்போகிறாராம் ரஜினி. இந்த படத்தில் ஒத்திகை பார்த்துவிட்டு நிஜத்தில் முழுவீச்சில் அரசியலில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!