ரஜினியின் அடுத்த படம் மாஸ் கமர்ஷியல் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு?

சென்னை:
அடுத்த படம் செம கமர்ஷியல் இயக்குனருடன்தான் என்று தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் வெளியாகவில்லை. யார் படம் என்கிறீர்களா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது டேராடூனில் நடந்துவருகிறது. ரஜினிக்கு மனைவியாக சிம்ரன், மகன்களாக பாபி சிம்ஹா, சனத் ரெட்டி ஆகியோர் நடிக்க, விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை முடித்தபிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே உள்ளது. கடந்த 3 படங்கள் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினி தற்போது செம மாஸ் கமர்ஷியல் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் கூட்டணி சேர்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும் இது உறுதியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று கோலிவுட்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!