ரஜினியின் புதிய படத்தில் நயன்தாரா?

சென்னை:
ரஜினி நடிக்க முருகதாஸ் இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது. ஆனால் தற்போது நடிகை நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர்.

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான “பேட்ட” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பும், பாராட்டுகளையும் பெற்றது.

தற்போது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிக்கவுள்ளார் இப்படம் அரசியல் சம்மந்தமான படம் என்றும் படத்தின் பெயர் “நாற்காலி” என சமீபத்தில் இணைதளத்தில் வைரலாக பரவியது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர் முருகதாஸ் படத்தில் ரஜினி போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறினார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 10-ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!